வனப்பகுதியில் வாழும் விலங்குகள் சாலையை கடந்து செல்லும் போது அவ்வழியாக செல்கின்ற வாகனங்களை ஓட்டுநர்கள் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தியில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, மான், புலி மாற்றும் யானை ஆகிய விலங்குகள் வசித்து வருகின்றது. இந்நிலையில் இந்த வனப்பகுதியில் பண்ணாரியில் இருந்து தாளவாடி செல்வதற்கு சாலை ஒன்று அமைந்திருக்கிறது. அந்த சாலையில் வனவிலங்குகள் கடந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இதனையடுத்து காட்டெருமைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்றுள்ளது.
அதன்பின் அவ்வழியாக வந்த வாகன ஓட்டுநர்கள் சாலையை கடந்து கொண்டிருந்த காட்டெருமைகளை தங்களுடைய மொபைல் போனில் படம் பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூறும் போது, கடந்த சில நாட்களாக பகல் நேரங்களிலேயே வனவிலங்குகள் சாலைகளில் சுற்றி வருகின்றது. மேலும் அவ்வழியாக செல்பவர்கள் வனவிலங்குகளை கண்டால் தங்களுடைய வாகனங்களை ரோட்டில் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.