Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வாயடைத்து நின்ற வனத்துறையினர்… பெண் யானைகள் செய்த செயல்…!

மனிதர்களை விட நாங்கள் ஒற்றுமையானவர்கள் என யானை கூட்டங்கள் நிரூபித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் காட்பாடியில் உள்ள சங்கர் யானை மூன்று பேரை கொன்றுள்ளது. ஆகவே அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நான்கு நாட்களாக முயற்சி செய்து வருகின்றனர். அவர்களது முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இந்நிலையில் 5-வது நாளாக நேற்று புஞ்ச கொல்லி பகுதியில் சங்கர் யானை கூட்டத்துடன் நிற்பதை வனத்துறையினர் கண்டனர்.

Elephants guarding and taking away an anesthetized shankar elephant

அதன்பிறகு வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதைதொடர்ந்து 45 நிமிடங்களில் மற்றுமொரு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தனர். ஆனால் கூட்டத்தில் இருந்த இரண்டு பெண் யானைகள் சங்கர் யானையின் மீது ஊசியை செலுத்த முடியாதவாறு மறைத்து நின்று கொண்டது. அப்போது சங்கர் யானை சிறிது மயக்கத்தில் இருந்தது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சங்கர் யானைக்கு மயக்கம் தெரிந்தது.

பின் அருகில் இருந்த இரண்டு பெண் யானைகளும் சங்கர் யானை அழைத்துக்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. யானைகளின் இந்த ஒற்றுமையை பார்த்து வனத்துறையினர் வாயடைத்து நின்றனர். மனிதர்களாகிய நாம் ஆயிரம் காரணங்களால் தங்களுக்குள் பிரிந்து கிடக்கிறோம். ஆனால் மனிதர்களை விட நாங்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள் என இந்த யானை கூட்டங்கள் நிரூபித்து சென்றுள்ளது.

Categories

Tech |