Categories
மாநில செய்திகள்

“வனத்துறையில் காலிப்பணியிடங்கள்”…. அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு…!!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழகத்தில் வனக்காவலர், வனக்காப்பாளர் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 1700, காலியாக 644 பணியிடங்கள் உள்ளது. புதிய வழிகாட்டுதலை 2020க்குள் உருவாக்க வேண்டும் என்றும், சட்ட விரோதமாக வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வேண்டும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என  தேசிய வன உயிரியல் திட்டம் 2017 2031 பரிந்துரைத்துள்ளது .

அதை தமிழக வனத் துறையினர் பின்பற்றவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். காலிப்பணியிடங்களை  நிரப்ப தமிழக வனத்துறைக்கு மனு அனுப்பினேன். அதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி மத்திய மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், பாதுகாப்பாளர்கள் பிப்ரவரி 23 சிறப்பு அமர்வு முன் இதற்கான பதிலை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |