Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய பாவங்களை மன்னியுங்கள்”…. புனித மெக்காவில் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த மும்தாஜ்…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மும்தாஜ். இவர் தன்னுடைய கவர்ச்சி நடனத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த மும்தாஜ் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகை மும்தாஜ் இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நடிகை மும்தாஜ் ஒரு வீடியோ எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் இந்த பூமியில் பிடித்த இடமான மெக்காவுக்கு வந்ததை நான் என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக நினைக்கிறேன். என்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. நான் அனைத்து மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். நாங்கள் செய்த குற்றங்களை மன்னித்து எங்களுக்கு இன்பமான வாழ்க்கையை தாருங்கள். எங்களுடைய பாவங்களை மன்னியுங்கள் என்று கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Mumtaz –Actor (@mumtaz_mumo)

 

Categories

Tech |