Categories
உலக செய்திகள்

பணத்தை எடுத்துட்டு ஓடல… நான் ஏன் வெளியேறினேன் தெரியுமா… அஷ்ரப் கனி விளக்கம்..!!

ரத்தக்களறியை தடுக்கவே வெளியேறினேன் என்று ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி விளக்கமளித்துள்ளார்..

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அவர்கள் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றிக் கொண்டே வரும்போது கடைசியாக தலைநகர் காபூலை கைப்பற்றும் நிலையில், அந்நாட்டு அதிபராக இருந்த  அஷ்ரப் கனி தப்பிச் சென்ற போது, பணத்தால்  நிரப்பப்பட்ட 4 கார்கள் ஒரு ஹெலிகாப்டர் உடன் தனது நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும், ஹெலிகாப்டரில் திணிக்க பட முடியாத மீதம் இருந்த பணம் அப்படியே விட்டு செல்லப்பட்டதாகவும் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.. தப்பி சென்ற அஷ்ரப் கனி  ஓமனில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் ரத்தக்களறியை  தடுக்கவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினேன். பொருட்கள், பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.. விரைவில் நாடு திரும்ப உத்தேசிப்பதாகவும், ஆப்கானிஸ்தான் மக்களுடன் பேசவிருப்பவதாகவும் அஷ்ரப் கனி  விளக்கம் அளித்துள்ளார்..

Categories

Tech |