மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜக்கப்பன் 8-வது கிராஸ் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான ஜான் லூயிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான் லூயிஸ் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வேன் சற்றும் எதிர்பாராதவிதமாக முன்னாள் ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜான் லூயிஸை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜான் லூயிஸ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.