Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஸ்டெம்புக்கு பதில் பிளாஸ்டிக் நாற்காலி…. நடு ரோட்டில் பேட்டிங் செய்த பிரட் லீ..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ ஜெய்ப்பூரில் சாலையில் சிறுவர்களுடன்  சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய  புகைப்படம்   இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஐ.பி.எல் சீசன் ஆரம்பித்து விட்டாலே  கிரிக்கெட் ரசிகர்கள்  மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரே குஷி தான். போட்டியில் விளையாடும் இந்திய  கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும், அணியின் பயிற்சியாளர்களும் தங்களது குடும்பத்தினருடன்  இந்தியாவுக்கு  வந்து ஒரு ஜாலியான டூர் அடித்துவிடுகிறார்கள்.

Image result for The Australian former cricketer Hayden city in Chennai.

இந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் சமீபத்தில் மாறுவேடத்தில் சென்னையில்  தி நகரை சுற்றி சுற்றி பொருள்கள் வாங்கி வந்த புகைப்படத்தை வலைத்தளங்களில் பகிர்ந்தார். இது வைரலாக பரவியது.

Image result for Aussie Legend Brett Lee Enjoys Gully Cricket In Jaipur, Takes The Traditional Camel Ride

 

இந்தநிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, ஜெய்ப்பூரில் உள்ள  சாலையில் இறங்கி அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து  கிரிக்கெட் விளையாடினார். அங்கு விளையாடிய பிரட் லீயின், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Image result for Brett Lee in Jaipur

சாலையின்  நடுவே ஸ்டெம்புகளுக்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை வைத்துகொண்டு சிறுவர்களுடன் சேர்ந்து பிரட் லீ கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதனை அங்குள்ள வாலிபர்கள் மற்றும்  மக்கள் சுற்றி நின்று பார்த்து கண்டு களித்தனர்.

Image result for Brett Lee in Jaipur

அதுமட்டுமில்லாமல் பந்துவீசுவது எப்படி, பேட்டிங் செய்வது எப்படி என்றும் பிரட் லீ சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர்  விளையாட்டை முடித்துவிட்டு அங்கிருந்து  ஒட்டகத்தின் மீது ஏறி சவாரி  செய்து பிரட் லீ மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |