Categories
தேசிய செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்… கொரோனாவுக்கு பலி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் எம்.பி.யுமான சேத்தன் சவுகான் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் 73 வயதான சேத்தன் சவுகான். இவர் 40 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். மேலும் சுனில் கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆடியுள்ளார்.  இதேபோன்று மராட்டியம் மற்றும் டெல்லி அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளிலும் அவர் விளையாடி இருக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். முன்னாள் எம்.பி.யான இவர் உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் அமைச்சராகவும் இருந்து வந்தார்.

சென்ற ஜூலை மாதம் 12-ந்தேதி நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஆனாலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அரியானாவின் குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல உறுப்புகள் பாதிப்படைந்திருந்ததால் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயரிழந்தார். உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த 2-வது அமைச்சர்  இவராவார்.

Categories

Tech |