Categories
தேசிய செய்திகள்

Breaking : சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடல்நலக்குறைவால் மறைவு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி (74) உடல்நலக்குறைவால் காலமானார்.

ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாரடைப்பு காரணமாக ராய்ப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அஜித் ஜோகியின் உயிர் பிரிந்தது. அவரது மகன் அமித் ஜோகி தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.சத்தீஸ்கர் மாநில முதல்வராக அஜித் ஜோகி நவம்பர் 2000 முதல் 2003 நவம்பர் வரை பொறுப்பில் இருந்தார். காங்கிரசில் இருந்து பிரிந்த அவர் 2016ல் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |