ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.இதற்க்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எழுப்பினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் கடுமையான வன்முறை ஏற்படுமென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒரு வாரமாக அளவுக்கதிகமான துணை இராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
மேலும் நேற்று இரவு அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இணைய சேவை தூண்டிக்கப்பட்டது. மத்திய அரசின் ஜம்மு விவாகரத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பிள்ளது. இதை தொடர்ந்து அனைத்து மாநிலமும் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிர படுத்தவேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் , ஜம்மு தலைநகர் ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.