முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சர் பாபுலால் கவுர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவை சேர்ந்த பாபுலால் கவுர் (வயது 89) 2004 முதல் 2005-ஆம் ஆண்டு வரை மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். அம்மாநிலத்தின் கோவிந்த்புரா தொகுதியில் 10 முறை எம்.எல்.ஏவாக இவர் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் பாபுலால் கவுர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ஸ்பாபுலால் கவுர் ஜி பல ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்தார். அவர் எங்கள் கட்சியை வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றினார்.மத்திய பிரதேச அமைச்சராகவும் முதல்வராகவும் இருந்த அவர் மாநிலத்தை மாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவால் வருத்தம். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.
Shri Babulal Gaur Ji served people for decades. From Jana Sangh days, he worked constantly to strengthen our Party. As Minister and CM of Madhya Pradesh he undertook many efforts to transform the state. Saddened by his demise. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 21, 2019