Categories
தேசிய செய்திகள்

விமானநிலையத்தில் கெடுபிடி “சலுகைகளை கட்” சோதனை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ..!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகளை மறுத்த  விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் இசட்பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் உடன் செல்வார்கள்.இந்நிலையில் நேற்று இரவு  விஜயவாடா விமான நிலையத்துக்கு சந்திரபாபு  நாயுடன்  ஆந்திர மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் சின்ன  ராஜப்பாவும் வந்திருந்தார்.

Airport security officials detained Chandrababu Naidu க்கான பட முடிவு

சந்திரநாயுடுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு இருப்பதால் நேரடியாக வி.ஐ.பி.க்கள் வாகனத்தில் ஏறி விமானத்துக்கு செல்ல முற்பட்டார்.அப்போது விஜயவாடா விமான நிலையத்தில் இருந்த  பாதுகாப்பு படையினர் நேரடியாக செல்லும் வி.ஐ.பி. அந்தஸ்தை சந்திரபாபு நாயுடுக்கு கொடுக்க மறுத்தனர். ஆந்திர மாநிலத்தின் தற்போதைய  எதிர்க்கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு இருந்த போதிலும் அவருக்கு விமான நிலையத்துக்குள் இனி சலுகைகள் தர இயலாது எனவே பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொண்டதையடுத்து சந்திரபாபு நாயுடு தனது காரில் இருந்து இறங்கி பயணிகளோடு பயணியாக வரிசையில் நின்று சாதாரண பயணிகள்  ஸ்கேன்கருவியை கடந்த செல்வது போல அவரும் கடந்து சென்றார்.

நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம்  பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி

அப்போது விமான நிலைய பாதுகாப்பு படை வீரர் அவரை முழுமையாக பரிசோதனை செய்தனர். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை பாதுகாப்பு படையினர் எல்லா பயணிகளையும் போல பயணியோடு பயணியாக விமான நிறுவனத்தின் பஸ்சில் ஏற்றி அழைத்துச் சென்றனர். சந்திரபாபு நாயுடுக்கு விமான நிலையத்தில் சலுகைகள் தராததற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய , மாநில அரசுக்கள் சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெலுங்கு தேசம் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |