Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : மிக நீண்ட உரை…. ஆனால் வெற்று உரை… ராகுல் விமர்சனம்..!!

மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் நீண்ட நேரம் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பட்ஜெட் குறித்து கருத்து கூறியதாவது, “வரலாற்றில் இது ஒரு மிக நீண்ட பட்ஜெட் உரையாக இருக்கலாம். ஆனால் இது வெற்று உரை. நாட்டின் முக்கியப் பிரச்னையான வேலைவாய்ப்பின்மையில் கவனம் செலுத்தப்படவில்லை. நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க எந்த உறுதியான திட்டமும் இல்லை. தந்திரமாக சிலவற்றைச் சொல்கின்றனர். ஆனால் அவைகள் செயல்பாட்டில் இல்லை. திரும்பத் திரும்ப அதே பேச்சு. வெற்று திட்டங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |