Categories
மாநில செய்திகள்

“திருக்குறளை தேசிய நூலாக மாத்துங்க”- குஜராத்தில் இருந்து எழுந்த குரல்..!!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என குஜராத் முன்னாள் டிஜிபி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில், பங்கேற்றுள்ள பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் பேசுகையில், திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரிக்கை எதுவும் தமிழ்நாடு அரசிடமிருந்தோ அல்லது மற்ற அமைப்புகளிடம் இருந்து வரப்பெற்றதா எனவும், அவ்வாறு வந்திருந்தது எனில் அதுகுறித்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்து பேசிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஸ் பொகிரியால், ‘ திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று குஜராத் மாநில முன்னாள் டிஜிபி ஸ்ரீ குமாரிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. ஆனால், எந்த ஒரு புத்தகத்துக்கும் தேசிய அந்தஸ்து அளிக்கும் எண்ணம் மத்திய அரசிடம் தற்போது இல்லை’ என்றார். குஜராத் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் கேரளாவில் பிறந்தவர், எழுத்தாளர். 3 புத்தகங்களை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |