Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி….. சூதாட்டத்தில் சிக்கிய முன்னாள் பயிற்சியாளர்….!! 

இந்திய மகளிர் அணியின் முன்னாள்  கிரிக்கெட் பயிற்சியாளர் துஷார் ஆரோத்தே சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளார் 

இந்தியாவில் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழாவின்  12-வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கி ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை  14 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. இந்தப் போட்டி நடைபெற்ற போது  குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள அலகாபுரி பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Related image

தகவலின் படி போலீசார் விரைந்து சென்று பெரிய ஸ்க்ரீனில்  ஐ.பி.எல் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்ட விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 18 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் துஷார் ஆரோத்தேவும் உள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் அனைவரிடமிருந்தும், சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Image result for Tushar Aaron

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் இந்திய அணி வீராங்கனைகளுக்கு இடையே  மோதல் ஏற்பட்டது. இந்த காரணத்தால் துஷார் ஆரோத்தே  பயிற்சியாளர் பதவியில் இருந்து  நீக்கப்பட்டார். தற்போது சூதாட்டப் புகாரில் சிக்கிய துஷார் உட்பட அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர் . இது குறித்து விசாரணை தொடரும் என காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |