Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

முன்னாள் இந்திய கைப்பந்து பயிற்சியாளர்.. மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலி.. வழங்கிய மாவட்ட ஆட்சியர்..!!!

இந்திய கைப்பந்து முன்னாள் பயிற்சியாளருக்கு மாவட்ட ஆட்சியர் மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலியை வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் முன்னாள் இந்திய கைப்பந்து அணியின் பயிற்சியாளர் ஆவார். இவர் சென்ற சில வருடங்களுக்கு முன்பாக விபத்து ஏற்பட்டதில் முதுகுத்தண்டு பிரச்சனை ஏற்பட்டு அவரால் நடக்க முடியாமல் போனது.

இதனால் இவருக்கு அதிநவீன மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலியை அண்ணாதுரை எம்பி நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இந்த நிதியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசனுக்கு வழங்கினார். இந்த நிகழ்வின்போது ஆவின் தலைவர், நகராட்சி தலைவர், மாவட்ட திறனாளிகள் அலுவலர் என பலர் அங்கிருந்தார்கள்.

Categories

Tech |