கர்நாடக முன்னாள் அமைச்சரும் ஜனதா தளம் மூத்தத் தலைவருமான கே. அமர்நாத் ஷெட்டி இன்று காலை வயதுமூப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 80.
அமர்நாத் ஷெட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் குன்றியதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்தார்.
ஜனதா தளத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய அவர் 1983ஆம் ஆண்டில் தக்ஷிணா மாவட்டம் மூத்பித்ரி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1987ஆம் ஆண்டில் சுற்றுலா அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் 1994ல் தொழிலாளர் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.