Categories
தேசிய செய்திகள்

கேரள முன்னாள் முதல்வர் மகன் … கொரோனா தொற்றால் பாதிப்பு…!!

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கோவா முன்னாள் முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்தவர் மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர்.  இவரும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் உத்பாலுக்கு, நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இது குறித்து நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” கொரோனா பாதிப்பு எனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. லேசான தொற்றே ஏற்பட்டு உள்ளது.

அதனால், வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொள்வேன்” என அவர் கூறினார். எனினும், மருத்துவர்கள் அளித்த அறிவுரையின்படி, முறையான சிகிக்சை பெறுவதற்காக அவர் மருத்துவமனையில் சேர்ந்து உள்ளார். நான் நலம் அடைய வேண்டி கொண்ட அனைவருக்கும் நன்றி என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |