Categories
பல்சுவை

எளிமையின் மறு உருவம் கக்கன் – வாழ்க்கை வரலாறு

மதுரை மாவட்டம் தும்பைபட்டி என்னும் கிராமத்தில் ஜூன் 18 1908 இல் பிறந்தவர் கக்கன். தொடக்கக் கல்வியை வேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பை திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தார். தனது இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர் தன் பள்ளிப் பருவத்திலேயே கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டார். 1932இல் சொர்ணம் பார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு பல சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டு கடுமையான தண்டனைகளை அனுபவித்தார்.

1945 திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள்.பின்னர் தேர்தலில் போட்டியிட்ட இவர் தமிழக அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன், பொதுப்பணித்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து தனது பங்களிப்பை ஆற்றினார். இவர் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை தமிழகத்தில் முதன் முறையாக அமல்படுத்தியவர் கக்கன். தான் அமைச்சராக இருந்தபோது பேருந்துக்கு காத்திருந்த பயணித்தவர். தனது இறுதிக் காலத்தில் படுக்கை கூட இல்லாமல் மதுரை அரசு பொது மருத்துவமனையின் தரையில் படுத்து இருந்தவர் அவரது எளிமை நேர்மைக்கு இதுவே சான்றுகள். சிறு கிராமத்தில் வார்டு உறுப்பினர்கள் கூட ஆடம்பரமாகவும் ஆர்ப்பாட்டம் ஆகவும் இருக்கும் இந்த காலகட்டத்தில் கக்கன் போன்றவர்களின் வாழ்க்கையை நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கும் சமூக சீர்திருத்தவாதிகளுக்கும் கக்கன் அரிய முன்னுதாரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Categories

Tech |