ஒட்டப்பிடாரத்தொகுதி திமுக வேட்பாளர் எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ். ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் .
மே 19 ம் தேதி , இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் , தேர்தல் பிரச்சாரம் பலமாக நடந்துவருகிறது . இந்நிலையில் ஒட்டப்பிடாரத்தொகுதி திமுக வேட்பாளர் எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ் .ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ மற்றும் அனிதா ஆர் .ராதாகிருஷ்ணன் எம் . எல் .ஏ அவர்களும் தொண்டர்களுடன் நேற்று புதியம்புத்தூரில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர் .
இப்பிரச்சாரத்தில் புதியம்புத்தூர் ஊராட்சிமன்றத்தலைவர் ஆர் .பொன்ராஜ் , இளைஞர் அணி அமைப்பாளர் ஆர் .அருள்ராஜ் , கலை இலக்கிய பகுத்தறிவு துணைஅமைப்பாளர் த .ஐசக்தங்கம் ,திருவரசு , ஞான துரை ஆகியோர் கலந்து கொண்டனர் .