முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-வின் கணவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதுநிலை கண்காணிப்பாளராக திருச்சி விமான நிலையத்தில் இருக்கும் தீயணைப்பு படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர் துறையூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர் ஆவார். இந்த தம்பதிகளுக்கு ஜீவானந்தன், பாபு என்ற இரு மகன்களும், நர்மதா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த ராமச்சந்திரன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கே.கே நகர் காவல் துறையினர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.