Categories
சினிமா தமிழ் சினிமா

காலில் விழுந்த மாஜி எம்எல்ஏ….. செம கெத்து காட்டிட்டாரு….‌ விஜயின்‌ ரசிகர்கள் சந்திப்பை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த சந்திப்பு நிகழ்வின்போது அகில இந்திய விஜய் மக்கள் இயக்க கழகத்தின் தலைவரான புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யின் காலில் விழுந்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளங்களில் வெளியான நிலையில், நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த சம்பவத்தை வைத்து நடிகர் விஜய்யை பங்கமாய் கலாய்த்து ஒரு ட்வீட் பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் விஜயின் தளபதி புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து கும்பிடும் மன்ற நிர்வாகிகள். விஜயை விட செம கெத்து காட்டினார் என்று ரசிகர்கள் பெருமிதம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி மாநிலத்தில் எம்எல்ஏவாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |