பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்தப் பத்திரிகையாளருமான அஸ்வினி குமார் சோப்ரா (63) குர்கானில் நேற்று காலமானார். அஸ்வினி குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததன் காரணமாக அவர் குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
16ஆவது மக்களவை தேர்தலின்போது ஹரியானாவின் கர்னால் தொகுதியிலிருந்து சோப்ரா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோப்ராவின் மறைவிற்கு ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், பஞ்சாப் கேசரி இதழின் டெல்லி ஆசிரியருமான அஸ்வினி குமார் சோப்ரா மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டேன். திறமையான அரசியல்வாதி, வெற்றிகரமான பத்திரிகையாளர் என உங்களின் வாழ்வு அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டும். உங்களின் ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாறட்டும்” எனக் கூறியுள்ளார்.