தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் விவசயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் வெப்பச் சலனத்தால் தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.