பிரான்ஸ் நாட்டில் முன்னால் அதிபராக இருந்தவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. இவர் தன் தேர்தல் பரப்புரையின் போது முறைகேடு செய்துள்ளார் என்று புகார் கூறப்பட்டது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிக்கு சர்கோஸி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது.
ஆகையால் தவறு செய்துவிட்டு அதனை மறைக்க நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க நிக்கோலஸ் சர்கோஸிக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. முன்னதாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆனால் அதன் பிறகு ஓராண்டு தண்டனை அனுபவித்தால் மட்டுமே போதும் என்று தீர்ப்பளித்தது. பிரான்ஸ் நாடு நவீனமயமாக்கப்பட்டதற்குப்பின், பதவியில் இருந்த ஒருவர் சிறைத்தண்டனைக்கு ஆளாவது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது.