தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் உளறியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ” திமுக தலைவர் ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது.
அப்போது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தது என்று கூறிய அவர் முன்னாள் பிரதமர் முலாயம்சிங் என்று கூறியுள்ளார். பின்னர் தான் உளறியதை சுதாரித்து கொண்ட அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் என்று தெரிவித்துள்ளார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் நீட் தேர்வை ரத்து செய்ய மோடியால் மட்டுமே முடியும் என்று கூறியுள்ளார்.