Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி..! திடீரென காலமான முன்னாள் அதிபர்… பிரபல நாட்டில் சோகம்..!!

நேற்று தென்கொரியாவின் முன்னாள் அதிபர் சுன் டூ-ஹ்வான் திடீரென மாரடைப்பினால் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்கொரியாவின் முன்னாள் அதிபரான சுன் டூ-ஹ்வான் அந்நாட்டில் 1979-ஆம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தை தன்வசம் கொண்டு வந்துள்ளார். மேலும் ராணுவ வீரரான சுன் டூ-ஹ்வான் ஜனநாயக போராட்டங்களை ஆட்சியில் இருந்த போது ஒடுக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து ரோஹ் என்பவர் 1987-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் பதவியை ஏற்றார்.

இந்த நிலையில் அல்சைமர் என்ற நோயால் சுன் டூ-ஹ்வான் அவதிப்பட்டு வந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சுன் டூ-ஹ்வான் ரத்த புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Categories

Tech |