ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் ராவ். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சிவபிரசாத் கடந்த 2016 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது சட்டப்பேரவை சபாநாயகராக இருந்துள்ளார். இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் சிவபிரசாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலை செய்துள்ளதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். தற்கொலை குறித்த காரணம் தெரியவில்லை. முன்னதாக இவர் மீது சட்ட பேரவையில் இருந்து பொருட்களை வீட்டிற்கு கொண்டு சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.