Categories
மாநில செய்திகள்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். மோகன் மறைவு: மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

உடல் நலக்குறைவால் உயிரிழந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ். மோகனின் உடலுக்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் எஸ். மோகன் (90). இவர், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

Image result for எஸ். மோகன்

உடல்நலக்குறைவின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரது இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Image

நீதிபதி மோகன் உயிரிழந்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் கலைஞரின் உற்ற நண்பரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசருமான டாக்டர் எஸ். மோகன் உடல்நலக்குறைவால் மறைந்த துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் உறவினர்கள், வழக்கறிஞர்கள், நீதியரசர்கள், தமிழ் ஆர்வலர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |