முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9-ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் , எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை. சில நாட்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர்கள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் இருந்ததால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மதியம் 12 : 7 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.