முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். 67 வயதுடைய இவரின் உடல் நிலை சமீப காலமாக மிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவுக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுஷ்மா சுவராஜ் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது வெளியுறவுத்துறை மந்திரியாகவும் சுஷ்மா சுவராஜ் இருந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக சுஷ்மா போட்டியிடவில்லை. இருப்பினும் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. பின்னர் மத்திய அமைச்சரவை பதவியேற்பின்போது, தனக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.