Categories
உலக செய்திகள்

‘பார்முலா 1’ கார் பந்தையம்…. இத்தனை மணி நேரத்துல…. நெதர்லாந்தைச் சேர்ந்த வீரர் வெற்றி….!!!

சவுதி அரேபியன் கிராண்ட்பிரி போட்டி நெதர்லாந்து வீரர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

‘பார்முலா1’ கார் பந்தையம் இந்த ஆண்டு 22 சுற்றுகளாக நடைபெறுகிறது. இதில் சவுதி அரேபியன் கிராண்ட் பிரி பேட்டி ஜெட்டா ஓடுதளத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டாவது சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 10 அணிகளைச் சேர்ந்த 20 கார் வீரர்கள் 3௦8.45 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தனர்.

இந்த போட்டியில் வருட சாம்பியனான நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி நேரம் 24 நிமிடம் 19.293 வினாடியில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து முதல் சுற்றில் மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லெர்க் (பெராரீ அணி) இரண்டாவது, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் சைன்ஸ் (பெராரீ அணி) 3வது இடத்தையும் வென்றனர். இதற்கிடையில் ஏழு முறை சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 3வது சுற்றான ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரி போட்டி ஏப்ரல் 10-ந் தேதி நடக்கிறது.

Categories

Tech |