நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையில் மர்ம நபர்கள் சிலர் ஷட்டரை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடியில் ஒயின்சாப் ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வரும் சண்முகம் வழக்கம்போல விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக சண்முகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சண்முகம் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது கடையில் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் அவர் பரமத்திவேலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் மர்மநபர்கள் சிலர் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருட முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் உள்ளே இருக்கும் லாக்கரை உடைக்க முடியாததால் வெளிய இருந்த 1,000 ரூபாயை திருடி விட்டு அங்கிருந்த 5 மது பாட்டில்களை எடுத்து அங்கேயே குடித்துவிட்டு தப்பி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் லாக்கரை உடைக்க முடியாததால் உள்ளே இருந்த மதுபாட்டில்களை 3,50,000 தப்பியது. இச்ச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட முயன்ற நபர்கள் யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.