Categories
தேசிய செய்திகள்

“பாதுகாப்புபடையினர் அதிரடி” 5 மாதத்தில் 101 பயங்கரவாதிகள் காலி…!!

காஷ்மீரில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 101 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீரில் உள்ள உள்ளூர் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேரும் தொடர்ந்து பெருகி கொண்டே வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 50 இளைஞர்கள் வரை அங்கு மறைமுகமாக செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் பாதுகாப்பு படையினரின் அதிரடி 101  பயங்கரவாதிகள் உள்பட 101 பயங்கரவாதிகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியன் பகுதியில் 25 பேரும், புல்வாமாவில் 15 பேரும், அவாந்திபோராவில் 14 பேரும், குல்காமில் 12 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் மாநிலத்தில் அதிரடிப்படையினரால்  கொல்லப்படும் பயங்கரவாதிகள் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு  அதிகரித்து வருகிறது. 2014_ஆம் ஆண்டில் 53 பேரும், 2015_ஆம் ஆண்டில் 66 பேரும், 2016_ஆம் ஆண்டில் 88 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |