Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மாஸ் காட்டும் ”போலோ”வை அறிமுக செய்த ஃபோஸ்வேகன் …!!

புத்தம் புதிய போலோ செடான் மாடல் காரை ஃபோஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அண்மையில் புதிய செடான் மாடல் போலோ காருக்கான வரைபடத்தை வெளியிட்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்,  போலோ காரை அறிமுகம் செய்துள்ளது. ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ரேபிட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டது தான் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார். இதன் நீளம் : 4483 எம்.எம் , உயரம் : 1484 எம்.எம். இதில் முந்தைய மாடலை விட 49எம்.எம். நீண்ட வீல்பேஸ் உள்ளது.

இதில் 170 எம்.எம். அளவில் கிரவுண்ட் க்ளியரன்ஸ் இருக்கின்றது. இது அகலமான கிரில், கூர்மையான ஹெட்லேம்ப்களுடன் குரோம் பிட்களை  கொண்டுள்ளது. பின்புற வடிவமைப்பு மிக எளிமையாக காட்சியளிக்கிறது. ஸ்கோடா ரேபிட் போன்றே கதவுகள், கிளாஸ்ஹவுஸ் , ரூஃப் ஆகியவை தெரிகிறது.மல்டி-லேயர் டேஷ்போர்டு,  முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் உள்ளிட்டவை உள்புறம் கொடுக்கப்பட்டுள்ளது.

90 பி.ஹெச்.பி , 110 பி.ஹெச்.பி. செயல்திறன் கொடுக்கும் 1.6 லிட்டர் எம்.பி.ஐ. பெட்ரோல் மற்றும் 125 பி.ஹெச்.பி. பவர் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இந்த புதிய வகை போலோ செடான் மாடலில் வழங்கப்படுகின்றது. 1.6 லிட்டர் வெர்ஷனில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோ டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |