Categories
உலக செய்திகள்

அதிகாரி வீட்டில் மீட்கப்பட்ட சடலங்கள்.. தோண்ட தோண்ட வந்த பிணங்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!!

சல்வடோரில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து அதிகமான சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திகிலூட்டும் திரைப்படங்களில் வருவது போல அந்த முன்னாள் அதிகாரியின் வீட்டில் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மத்திய அமெரிக்க நாடு எல் சல்வடோரில் இருக்கும் அவரின் வீட்டிலிருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மீதமிருக்கும் உடல்களை மீட்பதற்கு ஒரு மாதமாகும் என்று கூறுகின்றனர்.  அதில் அதிகமானவை பெண்களின் சடலங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் காவல்துறை அதிகாரியான Hugo Ernesto Osorio Chavez என்பவர் உள்பட சுமார் 10 நபர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்து அவர்களுக்கு நியாயம் கேட்டு கூச்சலிட்டனர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இந்த பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |