Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை சரமாரியாக தாக்கிய 4 பேர் கைது..!!

மாட்டுக்கறி சூப் சாப்பிட இளைஞரை சரமாரியாக தாக்கிய 4 பேர் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்  

வட மாநிலங்களில் தான் மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கப்படுகிறார்கள் என்றால் தமிழகத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான் என்பவர் நாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர். இவர் சில நாட்களுக்கு முன்பு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டது மட்டுமில்லாமல் பைசான் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கண்ட 4 பேர்  ஆத்திரமடைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில்

Image result for மாட்டுக்கறி சூப்

இதையடுத்து முகம்மது பைசான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அவரை தாக்கியதாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த தினேஷ்குமார், கணேஷ் குமார், மோகன் குமார். அகஸ்தியன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Categories

Tech |