ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், மாநில காவல்துறையினர் ஹண்ட்வாராவில் ஒரு லஷ்கர்-இ-தைபா (எல்இடி) பயங்கரவாத தொகுதியை உடைத்துள்ளனர். இதையடுத்து, லஷ்கர் – இ – தைபா அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளது. மேலும் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 3 பேரை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சோர்ப்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த இந்த அமைப்பை ஹண்ட்வாரா காவல்துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர்.
அப்பகுதில் இளைஞர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததை தொடர்ந்து பயங்கரவாதிகளை கைது செய்ய பல சோதனைகள் நடத்தப்பட்டன. அதன்படி, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மூன்று ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் 12 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யாட்டுள்ளன.