துருக்கியில் 5 அடுக்கு கட்டிடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு குழந்தைகள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டில் உள்ள எசென்யுர்ட் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள 5 அடுக்கு கட்டிடம் ஒன்றில் நேற்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெட் வேகத்தில் பரவிய தீயானது அடுத்தடுத்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் வெளிநாட்டு குழந்தைகள் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பிறகு தீ விபத்தில் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் குழந்தைகளின் தாயார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் இந்த விபத்திற்கான காரணம் என்ன ? என்பது குறித்து தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை. எனவே இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு அரசு நிர்வாகம் மற்றும் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.