சூடானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நான்கு பேர் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஒன்று சூடான் நாட்டில் இயங்கி வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது திடீர் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சூடான் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சூடானில் உள்ள ஹர்டோமின் ஜப்ரா மாவட்டத்தில் அதிரடி தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அந்த வேளையில் பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை கடுமையாக நடைபெற்றுள்ளது. அதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உட்பட நான்கு பேர் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து உயிருடன் பிடிபட்ட 4 பயங்கரவாதிகளும் பிடிபட்டுள்ளனர். இருப்பினும் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.