காஷ்மீர் எல்லையான பிஞ்சோரா பகுதியில் இன்று போலீசார் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன்,
ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு நேற்று காலை முதல் அந்த மாவட்டத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர்.
#UPDATE Four terrorists have been killed in the ongoing encounter in Pinjora area of Shopian district. Police and security forces are carrying out the operation. More details awaited: Jammu & Kashmir Police https://t.co/vgSdgWb49c
— ANI (@ANI) June 8, 2020
அதில் இரு தரப்பினர் இடையே நடைபெற்ற தாக்குதலில் நேற்று மொத்தம் 5 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை ஷோபியன் மாவட்டத்தின் பிஞ்சோரா பகுதியில் மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. அப்போது போலீசாரும் பாதுகாப்பு படையினரும் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.