டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதிக்க்கப்பட்டு TNPSC அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் 14 பேரை கைது செய்துள்ள நிலையில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. டிஎன்பிஎஸ்சி தட்டச்சராக பணிபுரியும் மாணிக்கவேல், பார்சல் சர்விஸ் வாகன ஓட்டுனர் கல்யாண சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் முக்கிய குற்றவாளியான ஜெக்குமார் மற்றும் ஒம்காந்தனுக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.