Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி!

கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், தென் கொரியா கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 4,000க்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மொபைல்போன்களுக்கு காலர் டியூன் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் நடவடிக்கையை சுகாதார துறை மேற்கொண்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் 01123978046 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஸ்ரீ ராமலு தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவிலும் தற்போது 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |