ஆசிரியர் உட்பட 4 பேர் ஆற்றில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.பாறைப்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சக்திவேலுக்கு தீனதயாளன் என்ற அண்ணன் இருக்கின்றார். இவருக்கு சத்திய பாரதி என்ற மகள் இருந்துள்ளார். மேலும் சின்னமல்லனம்பட்டி பகுதியில் மற்றொரு சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் இருந்துள்ளார்.
இந்நிலையில் சக்திவேல், அர்ச்சனா, சத்திய பாரதி மற்றும் ஐஸ்வர்யா ஆகிய 4 பேரும் சந்தனவர்த்தினி ஆற்றுக்கு ஆனந்தமாய் குளிப்பதற்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா மற்றும் சத்திய பாரதி இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதிகள் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்துள்ளனர். அப்போது நான்கு பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கிவிட்டனர்.
இதனை அடுத்து பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு 4 பேரையும் பிணமாக மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நான்கு பேரின் உடலைகளையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.