Categories
அரசியல்

அதிமுக கூட்டணியில் தேமுதிக_விற்கு 4 தொகுதி ….. 21 சட்டமன்ற தொகுதியில் ஆதரவு…!!

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதி மற்றும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக_விற்கு ஆதரவு என்று ஒப்பந்தமாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது .தொகுதிப் பங்கீடு செய்வதில் தொடர்ந்து  இழுபறி நீடித்து வந்தது இந்த நிலையில் அதிமுக கூட்டணி குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையில் தேமுதிக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது .

இதையடுத்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதிக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம்,   இணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பொருளாளர் பிரேமலதா துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் சென்று ஆலோசனை நடத்தினர் .

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை_க்கு பின் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர் . இதில் பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . மேலும் வருகின்ற 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் தேமுதிக அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கும் என்றும் , தொகுதி ஒதுக்கீடு குறித்து எந்தெந்த தொகுதிகள் என்று ஆலோசித்து முடிவு செய்யப்படுமென்றும் அவர் தெரிவித்தார் .

Categories

Tech |