வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அப்போது தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலை ஓட்டியே சில மாநிலங்களின் சட்ட பேரவை தேர்தலையும் அறிவித்தார். இதில் சட்ட சபையின் பதவிக்காலம் முடிய உள்ள சிக்கிம் மாநில சட்ட பேரவைக்கு வருகின்ற மே 27-ஆம் தேதியிலும் , ஆந்திரா மாநில சட்ட பேரவைக்கு வருகின்ற ஜூன் 18-ஆம் தேதியிலும் , ஒடிசா மாநில சட்ட பேரவைக்கு ஜூன் 11-ஆம் தேதியிலும் , அருணாசலப்பிரதேசம் மாநில சட்ட பேரவைக்கு ஜூன் 1-ஆம் தேதியிலும் முடிவடைய உள்ள நிலையில் சட்டசபை தேர்தல்களும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது..
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது 4 மாநிலங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது சட்டசபைத் தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் போது காஷ்மீர் மாநிலத்துக்கும் சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழல் காரணமாக காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.