நான்கு வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் சேர்ந்தவர் முனியப்பன் சந்திகா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஏழு வயதில் ஒரு மகனும் நான்கு வயதில்தமிழினி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சந்திகா பணிக்கு சென்றுவிட தந்தை முனியப்பன் வீட்டின் அருகிலுள்ள கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். தந்தையை காண அந்தக் கட்டிடத்திற்கு சென்ற தமிழினியிடம் தந்தை வீட்டிற்கு போ என கூறியுள்ளார்.
பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தமிழினியை தேடிய தந்தை தமிழினியை காணாததால் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். பின்னர் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்த கட்டிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தண்ணீர் தொட்டியில் மூழ்கிக் கிடந்துள்ளார் தமிழினி. தமிழினியை மீட்டு காங்கயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் முனியப்பன். அங்கு தமிழினியை பரிசோதித்த மருத்துவர்கள் தமிழினி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.