Categories
உலக செய்திகள்

கென்யாவில் 14 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு… தொடரும் துயர சம்பவம்..!!

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்தனர்.

கென்யாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ககமிகா நகரில் தொடக்கப் பள்ளி ஓன்று உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியே வந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Image result for Fourteen children have been killed in a school  in Kenya's west."

இதில் குழந்தைகள் பலர் ஒருவர் மீது மற்றவர் விழுந்ததில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு 14 குழந்தைகள்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நெரிசல் எதனால் எப்படி ஏற்பட்டது?, மாணவர்கள் திடீரென பீதியடைந்து ஓடியது ஏன்? என்பது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Image result for Fourteen children have been killed in a school  in Kenya's west."

இது ஒன்றும் புதிதில்லை என்றும், கென்யாவில் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும், அங்கு இருக்கும் பள்ளிகளின் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குறியாகவே  இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Categories

Tech |