அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் பணிக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது
ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு அரசு அலுவலகங்கள் இயங்க தொடங்கியுள்ள நிலையில் தூய்மை பணிகளை அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை விட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஊரடங்கு சமயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அலுவலகங்களிலும், பொது பகுதிகளிலும், பணியிடங்களை சுத்தம் செய்வதும், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத பணியாளர்களுடன் வாரத்தில் ஆறு நாள் பணிபுரிய வேண்டும் என மே 15ஆம் தேதி அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.