பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கப் படுகின்றன. அதிலும் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கப் பெறும் என்பது பற்றிய தொகுப்பு
- தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வருவதனால் இதயம் தொடர்பான பிரச்சினைகள் குணப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும்.
- இரவில் தூக்கம் வரவில்லை என்றால் சப்போட்டா பழத்தின் சாரை அருந்திவர நிம்மதியான உறக்கம் வரும்.
- தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஆரம்பகால காசநோய் பிரச்சனைகளை குணப்படுத்த முடியும்.
- உடலில் ஏற்படும் அதிகப்படியான சூட்டை தணிக்க சப்போட்டா பழத்தின் சாரை அருந்துவது நல்லது.
- சப்போட்டா பழ சாறு பருகி வருவதன் மூலம் பித்த நோயை குணப்படுத்த முடியும்.
- சப்போட்டா சாருடன் சீரகத்தையும் சேர்த்து குடித்து வர பித்தமயக்கம் வராமல் தடுக்க முடியும்.
- கருப்பட்டி, சுக்கு மற்றும் சப்போட்டா பழ சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் பறந்துபோகும்.
- சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.
- கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து நிறைந்த சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.
- தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாகும்.
- எலுமிச்சை பழச்சாறுடன் சப்போட்டா பழச்சாறு சேர்த்து குடித்து வந்தால் சளி பிரச்சனை முடிவுக்கு வரும்.